தமிழ்நாடு

நீடாமங்கலத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு

29th Sep 2022 01:25 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில்  கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு நீடாமங்கலம்  ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கூடுதல் ஆணையர் அன்பழகன், பேரூராட்சி மன்ற தலைவர் ஆர்.ராம்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணி முத்துலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமுதாய வளைகாப்பில் கலந்து கொண்ட கர்ப்பிணித் தாய்மார்கள்.

குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டி.சங்கீதா வரவேற்றுப் பேசினார். நீடாமங்கலம் சப்இன்ஸ்பெக்டர் கோகிலா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சத்தியவாணன், ராஜலெட்சுமிகார்த்திகேயன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராணிசேகர், திமுக ஒன்றிய செயலாளர் ஆனந்த், வர்த்தகர் சங்க தலைவர் ராஜாராமன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: பிரம்மோற்சவத்தின் 3-ம் நாள்: சிம்ம வாகனத்தில் மலையப்பசுவாமி!

ADVERTISEMENT

150 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 20 வகையான சீர்வரிசைப்பொருட்கள், ஐந்து வகையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.  விழாவில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவில் மேற்பார்வையாளர் சி.லெட்சுமி நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT