தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு

29th Sep 2022 10:42 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அக்.2 ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு பல மாவட்டங்களில் காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.  

சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளிடம் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர், தென்காசி, புதுக்கோட்டை, திருவள்ளூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2ஆம் தேதி தமிழ்நாட்டின் 51 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதிகோரி தமிழ்நாடு உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறையிடம் ஆர்எஸ்எஸ் அமைப்பு தாக்கல் செய்திருந்தது. இந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில் அவ்வமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

சென்னை உயர் நீதிமன்ற அனுமதிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் பல மாவட்டங்களில் காவல் துறையினர் அனுமதி தர மறுத்துள்ளனர்.  

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஊர்வலத்திற்கு தடை: உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். மனு; நாளை விசாரணை

ADVERTISEMENT
ADVERTISEMENT