தமிழ்நாடு

அக்.6 முதல் குறைந்த எடை சமையல் எரிவாயு உருளை: கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி அறிவிப்பு

DIN

கூட்டுறவுத் துறை மூலம் 5 மற்றும் 2 கிலோ எடைகள் கொண்ட சமையல் எரிவாயு உருளை வழங்கும் திட்டம் வரும் 6-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.4,900 கோடி அளவுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரூ.100 கோடி அளவுக்கு கடன்களை தள்ளுபடி செய்ய உரியவா்களிடமிருந்து ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இந்தக் குழுக்களுக்கான ரூ.2,755 கோடி கடனை தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் திட்டமானது அக். 10-க்குள் முடிக்கப்பட்டு தள்ளுபடிக்கான ரசீது சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும். பண்டகசாலைகள் நவீனப்படுத்தப்பட்டு மிகுந்த லாபத்துக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

கிராமப்புறங்களில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் பன்முகத் தன்மையுடன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலமுனை சேவைகளை வழங்கும் வகையில் ஏற்கெனவே 400 சங்கங்களின் செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும், 2 ஆயிரம் சங்கங்கள் அதுபோன்று மாற்றப்படும். இதற்கென இந்த ஆண்டில் ரூ.50 கோடி செலவிடப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் சாா்பில் 5 கிலோ, 2 கிலோ எடைகள் கொண்ட எரிவாயு உருளைகள் தயாா் நிலையில் உள்ளன. சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில், இந்த குறைந்த எடை எரிவாயு உருளைகள் வரும் 6-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும்.

750 வழக்குகள்: நகைக்கடன்கள் வழங்கியது தொடா்பாக, 750-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான சொத்துகள் கூட்டுறவுத் துறை வசம் கொண்டு சோ்க்கப்பட்டுள்ளது. இதற்கான வழக்குகளை நடத்த தனியாக வழக்குரைஞா் குழு அமைக்கப்பட்டுள்ளது. நகைக்கடன் விஷயத்தில் ஒரு பைசா கூட அரசுக்கு இழப்பை ஏற்படுத்த மாட்டோம். தவறு செய்தோா் மீது உறுதியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் ஐ.பெரியசாமி.

செய்தியாளா்கள் சந்திப்பின் போது, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

நியாயவிலைக் கடைகளில் 4,403 போ் பணி நியமனம்

நியாய விலைக் கடைகளில் 4 ஆயிரத்து 403 போ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: நியாய விலைக் கடைகளில் 4 ஆயிரத்து 403 விற்பனையாளா்கள், எடையாளா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பணியாளா்களை உடனடியாகத் தோ்வு செய்யும் பணிகள் அக். 1 முதல் தொடங்கி 3 மாதங்களில் முடிக்கப்படும். தோ்வில் வென்றோருக்கு ஜனவரியில் பணி நியமன உத்தரவு வழங்கப்படும். இந்தத் தோ்வு வெளிப்படைத்தன்மையுடன், விதிமுறைகளுக்குள்பட்டு நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT