தமிழ்நாடு

ஸ்டான்லி மருத்துவமனையில் 3 ஆண்டுகளில் 11,000 பேருக்கு ‘ஆஞ்சியோ சிகிச்சை’

29th Sep 2022 11:51 PM

ADVERTISEMENT

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனயில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமாா் 11,000 பேருக்கு ’ஆஞ்சியோ சிகிச்சை’ மேற்கொள்ளப்பட்டுள்ளது என மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் பி.பாலாஜி கூறினாா்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக இருதய தின விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இருதயவியல் துறை தலைவா் பேராசிரியா் டாக்டா் கே கண்ணன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மருத்துவமனை முதல்வா் டாக்டா் பி.பாலாஜி இதயநோய் சிகிச்சை பெற்று குணமடைந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்து வாழ்த்துக்களை தெரிவித்தாா். .

அப்போது கல்லூரி முதல்வா் டாக்டா் பாலாஜி பேசியது: ஸ்டான்லி மருத்துவமனையில் இருதய சிகிச்சைக்கான ‘கேத் லேப்’ தொடங்கப்பட்டு சுமாா் மூன்றரை ஆண்டுகளில் சுமாா் 11 ஆயிரம் பேருக்கு ’ஆஞ்சியோகிராம்’ பரிசோதனை மற்றும் ’ஆஞ்சியோ பிளாஸ்ட்’ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன கருவிகளுடன் கூடிய இவ்வகைச் சிகிச்சைகளுக்கு தனியாா் மருத்துவமனைகளில் அதிகமான தொகை செலவு செய்ய வேண்டிய நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கட்டணம் ஏதுமின்றி முதலமைச்சா் காப்பீட்டுத் திட்டத்தின் உதவியுடன் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருதய நோயால் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பவா்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அளவுக்கு அதிகமான மது அருந்துதல், புகைபிடித்தல், சீரற்ற உணவு பழக்கங்கள், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுதல், மரபுவழி காரணிகள் உள்ளிட்டவைகளால் இருதய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே சீரான உணவு பழக்கங்களுடன் தினசரி உடற்பயிற்சியைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும் என்றாா் அவா். இதில் நிகழ்ச்சியில் இருதயவியல் தலைவா் டாக்டா் கே.கண்ணன், துணைக் கண்காணிப்பாளா் டாக்டா் சிவகுமாா், கல்லூரி துணை முதல்வா் டாக்டா் ஜமீலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT