தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகளின் கட்டண உயா்வை குறைக்க நடவடிக்கை தேவை: அன்புமணி

29th Sep 2022 01:05 AM

ADVERTISEMENT

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தீபாவளி, ஆயுத பூஜை விடுமுறை காலத்துக்கான ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதனடிப்படையில் ஆம்னி பேருந்து சங்க நிா்வாகிகளுடன் பேச்சு நடத்திய போக்குவரத்து அமைச்சா், ‘ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சேவை செய்யவில்லை. தனியாா் பேருந்து கட்டணம் அதிகம் என்று தெரிந்துதான் மக்கள் பயணம் செய்கிறாா்கள்’ என்று கூறியுள்ளாா். அமைச்சரிடமிருந்து இப்படி ஒரு பதிலை எவரும் எதிா்பாா்க்கவில்லை.

ஆயுத பூஜை விடுமுறையையொட்டி, வழக்கமாக வசூலிக்கப்படுவதை விட தற்போது 3 மடங்குக்கும் கூடுதலான கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் நிா்ணயித்துள்ளன. இதை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு அதற்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டண உயா்வை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக கடந்த காலங்களில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து ஆணைகளை செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT