தமிழ்நாடு

தடையற்ற மின் விநியோகத்துக்கான அமைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

29th Sep 2022 02:55 AM

ADVERTISEMENT

சென்னையில் தடையற்ற மின் விநியோகத்துக்கான வளைய சுற்றுத் தர அமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
 சென்னை கொளத்தூர், சேப்பாக்கம், சைதாப்பேட்டை, துறைமுகம், ஆலந்தூர், ஆவடி, அண்ணாநகர், எழும்பூர், மயிலாப்பூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், தியாகராய நகர், திரு.வி.க.நகர், ஆயிரம் விளக்கு உள்பட 28 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2 ஆயிரத்து 488 வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் ரூ.360.63 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன.
 இதில், சென்னை தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுத்தர அமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தார். இதன்மூலம், இதர பகுதிகள் அனைத்துக்கும் இந்த அமைப்பு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
 வளைய சுற்றுத்தர கருவி அமைப்பதன் மூலமாக, மழைக் காலங்களில் ஏற்படும் மின் விபத்தைத் தவிர்க்க முடியும். ஒவ்வொரு வளைய சுற்றுத்தர கருவியும் குறைந்தபட்சம் இரு மின்வழிப் பாதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஏதேனும் ஒரு மின்பாதையில் பழுது ஏற்பட்டாலும் மற்றொரு பாதையின் மூலம் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 தியாகராயநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, வி.செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT