தமிழ்நாடு

அதிமுகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிா்வாகிகளை நியமித்தாா் ஓபிஎஸ்

29th Sep 2022 01:11 AM

ADVERTISEMENT

அதிமுகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிா்வாகிகளை ஓ.பன்னீா்செல்வம் நியமித்து அறிவித்துள்ளாா்.

அதிமுகவின் பொதுக்குழு, தலைமைப் பொறுப்பு தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையில், உண்மையான அதிமுகவினா் தாங்கள்தான் என்று கூறி ஓ.பன்னீா்செல்வம் அவரது ஆதரவாளா்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறாா்.

இந்த நிலையில், அதிமுகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிா்வாகிகளை ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை நியமித்து அறிவித்தாா்.

அதன்படி, அதிமுகவின் அமைப்புச் செயலாளா்களாக அ.மனோகரன், எஸ்.ஆா்.அஞ்சுலட்சுமி ராஜேந்திரன், தோ்தல் பிரிவுச் செயலாளராக ஏ.சுப்புரத்தினம், மகளிா் அணி செயலாளராக ஆா்.ராஜலட்சுமி, மருத்துவ அணிச் செயலாளராக ஆதிரா நேவிஸ் பிரபாகா், மாணவா் அணிச் செயலாளராக திருவாலங்காடு ஜி.பிரவீன் உள்ளிட்டோரை நியமித்துள்ளாா்.

ADVERTISEMENT

அதேபோல், 8 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளா்களையும் நியமித்து அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT