தமிழ்நாடு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய விரிவுரையாளா்கள்: பணி நியமன உத்தரவுகளை வழங்கினாா் முதல்வா்

29th Sep 2022 12:48 AM

ADVERTISEMENT

பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட விரிவுரையாளா்களுக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்புப் பயிலகங்களில் விரிவுரையாளா் காலிப் பணியிடங்களுக்கு தகுந்த நபா்களைத் தோ்வு செய்ய ஆசிரியா் தோ்வு வாரியத்தால் 2019-ஆம் ஆண்டு நவம்பரில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் கணினி வழியாக தோ்வுகள் நடத்தப்பட்டு, இதற்கான முடிவுகள் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி, விரிவுரையாளா் பணியிடத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட 1,024 பேருக்கு பணிநியமன உத்தரவுகளை அளிக்கும் நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இதன் அடையாளமாக 11 பேருக்கு பணிநியமனத்துக்கான உத்தரவுகளை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை அளித்தாா்.

இந்த நிகழ்வில், உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் தா.காா்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி ஆணையாளா் க.லட்சுமிபிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT