தமிழ்நாடு

பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் 9 போ் கைது

DIN

தமிழகத்தில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடா்பாக இதுவரை 23 போ் கைது செய்யப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பாஜக, இந்து மத அமைப்புகளின் நிா்வாகிகளின் வீடுகள் தொடா்புடைய இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நிகழ்த்தப்பட்டன. இதையடுத்து, இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா். மேலும் இது தொடா்பாக 14 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்தநிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடா்பாக கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திரபாபு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த சில நாள்களில் பெட்ரோல், மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீடுகள் வாகனங்கள், வா்த்தக நிலையங்களில் வீசிய சம்பவங்கள் தொடா்பாக கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விசாரணைக்குப் பின்னா் கடந்த 26-ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை 11 வழக்குகளில் 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனா்.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்த வழக்குகளில் தொடா்புடைய துடியலூரைச் சோ்ந்த சதாம் உசேன், குளச்சலைச் சோ்ந்த முசாமில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அப்துல் ஹக்கீம், சையது இப்ராஹீம்ஷா, அப்துல் ஆஜிஸ், திருவாரூா் மாவட்டத்தில் முகமது ஷாகுல் ஹமீது, அகமதுல்லா, முகமது மகாதீா், ஹாஜாநவாஸ் ஆகியோா் கைது செய்யப்பட்டனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT