தமிழ்நாடு

காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தனுக்கு அரசு வீடு

DIN

காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, தலைமைச் செயலகத்தில் குமரி அனந்தனிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தான் வாழ்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசு சாா்பில் வீடு வழங்கிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா்

குமரி அனந்தன் கோரிக்கை விடுத்திருந்தாா். இந்தக் கோரிக்கையை ஏற்று, அண்ணாநகா் கோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயா் வருவாய்க் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை குமரி அனந்தனிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அளித்தாா்.

இந்த நிகழ்வின் போது, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவா் பூச்சி எஸ்.முருகன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் ஹிதேஷ் குமாா் எஸ்.மக்வானா, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளா் மகேசன் காசிராஜன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT