தமிழ்நாடு

சென்னையில் 2 நாள்களுக்கு டாஸ்மாக் இயங்காது!

28th Sep 2022 08:21 PM

ADVERTISEMENT


சென்னையில் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபியை முன்னிட்டு அக்டோபர் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார். 

டாஸ்மாக் பார்கள், உரிமம் பெற்ற சிறப்பு பார்கள் கட்டாயமாக 2 நாள்கள் மூடப்பட வேண்டும் எனவும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். 

நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 

அக்டோபர் 2ஆம் தேதி அரசு விடுமுறையாகயாக உள்ள நிலையில், சென்னையில் அந்த நாளன்று டாஸ்மாக் கடைகள், பார்கள், உரிமம் பெற்றுள்ள  சிறப்பு பார்களும் மூடப்பட வேண்டும்.

ADVERTISEMENT

அதேபோல், முகமது நபி (ஸல்) பிறந்த நாளான மிலாடி  நபியை முன்னிட்டு அக்டோபர் 9 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என ஆட்சியர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT