தமிழ்நாடு

மகளிர், மாணவர்களுக்கு இடையூறு? ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்

DIN


மகளிர் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எந்தவித இடரும் ஏற்படாத வகையில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் புதன்கிழமை இன்று (செப்.28) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இதில், போக்குவரத்துத்துறை அமைச்சர் அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள், நிதி நிலையினை மேம்படுத்துதல், அறிவிப்புகளின் செயல்படுத்தல் நிலை, விழாக்காலங்களில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்குதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

கட்டணமில்லா மகளிர் பயண திட்டத்தின் மூலம் நாளது வரையில் 173 கோடி மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இத்திட்டத்திற்கு அரசு நிதி உதவி வழங்குவதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பு எதுவும் இல்லை.

இந்தத் திட்டத்தை மேலும் சிறப்பிக்க ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மகளிரை மிகுந்த மரியாதையுடன் நடத்த வேண்டும் 

மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வரக்கூடிய காலை, மாலை நேரங்களில் பேருந்து பற்றாக்குறை ஏற்படாத வகையில் பள்ளிக் கல்வித் துறையுடன் ஆலோசித்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT