தமிழ்நாடு

கூத்தாநல்லூரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைக்காப்பு விழா

28th Sep 2022 04:36 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூர்: திருவாருர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைக்காப்பு விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட சமுதாய வளைக்காப்பிற்கு, நகர மன்றத் தலைவர் மு.பாத்திமா பஷீரா தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் அய்.வி.குமரேசன், பள்ளி வளர்ச்சிக் குழு உறுப்பினர் எஸ்.வி. பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, மரக்கடை, சேகரை, பாண்டுக்குடி, பண்டுதக்குடி , வடபாதிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும் அனைத்து சமூகத்திலிருந்தும் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு, 5 வகையான சாதம், 18 வகையான சத்துப் பொருட்களுடன், வளையல் இட்டு, சமுதாய வளைக்காப்பை, திருவாரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் தொடக்கி வைத்தார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது: சமுதாய வளைக்காப்பு கடமைக்கு செய்யப்படும் நிகழ்வு அல்ல. கர்ப்பிணிப் பெண்களின் பொருளாதாரக் கஷ்டங்களை அறிந்து, தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். கர்ப்பிணியானப் பெண்கள் எந்த அளவிற்கு, மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அது போலத்தான் வயிற்றில் வளரக் கூடிய குழந்தையும் இருக்கும். கர்ப்பிணித் தாய்மார்கள் ஆரோக்கியமான, அறிவுள்ள குழந்தையாக ஈன்றெடுக்க வேண்டும் என்றார்.

இதையும் படிக்க: கேரள பிஎஃப்ஐ பொதுச் செயலாளர் கைது

இவ்விழாவில், நகர மன்ற துணைத் தலைவர் மு.சுதர்ஸன், புள்ளமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் டீ. செல்வம், மாவட்டப் பிரதிநிதி கு.ரவிச்சந்திரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, நகர மன்ற உறுப்பினர் துரைமுருகன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நிர்வாகிகள் கவனித்தனர்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT