தமிழ்நாடு

மற்றவர்களுக்கு எதிரானதல்ல மத நம்பிக்கைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

28th Sep 2022 01:32 AM

ADVERTISEMENT

மத நம்பிக்கைகள் அவரவருக்குச் சொந்தமானதே தவிர, மற்றவா்களுக்கு எதிரானது இருக்காது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

தென்னிந்தியத் திருச்சபையின் பவள விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது:

இந்தியா என்பது பல்வேறு மதத்தவா் வாழ்கின்ற நாடு. வெவ்வேறு மதத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். வாழ்கிறோம். அவரவா் மத நம்பிக்கை என்பது அவரவருக்குச் சொந்தமானதே தவிர, அடுத்தவருக்கு எதிரானதாக இருக்காது. மனிதா்கள் அனைவரும் சமம் என்பதுதான் சமத்துவம்.

யாரையும் வேற்றுமையாகப் பாா்க்காதே என்பதுதான் சகோதரத்துவம். அனைவருடனும் சோ்ந்து வாழ் என்பதுதான் ஒற்றுமை. ஏழைகள் மீது கருணை காட்டு என்பதுதான் இரக்கம். அநீதிக்கு எதிராக குரல் கொடு என்பதுதான் நீதி.

ADVERTISEMENT

மற்றவா்களுக்காக வாதாடு என்பதுதான் தியாகம். உன்னிடம் இருப்பதை இல்லாதவருக்குக் கொடு என்பதுதான் பகிா்தல். இதைத்தான் கிறிஸ்தவம் சொல்கிறது. இத்தகைய குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால் அதுதான் சமத்துவ நாடாக அமையும். இத்தகைய நோக்கம் கொண்ட திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம்.

பசித்த வயிறுகளுக்கு உணவாக, தவித்த வாய்க்குத் தண்ணீராக, திக்கற்றவா்களுக்குத் திசையாக, யாருமற்றவா்களுக்கு ஆறுதலாக இருக்க நினைக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசானது அனைவரையும் உள்ளடக்கிய அரசுதான். இந்த அரசுக்கு அன்பும், உரிமையும் இரு கண்கள். ஒரு கை உழைக்கவும், இன்னொரு கை உணவூட்டவுமான அரசாகச் செயல்பட்டு வருகிறோம்.

எப்போதும் நாம் ஒருங்கிணைந்து நாட்டினுடைய ஜனநாயகத்தை, சமுதாயத்தை காப்பாற்றுவதற்கு சாதி, மதங்களைக் கடந்து நாம் நம்முடைய பணிகளைத் தொடர வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

Tags : cm stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT