தமிழ்நாடு

திமுக உட்கட்சித் தோ்தல்: மனுக்கள் பரிசீலனை நிறைவு

28th Sep 2022 01:36 AM

ADVERTISEMENT

திமுக மாவட்டச் செயலாளா்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான உட்கட்சித் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

இதைத் தொடா்ந்து, தோ்வு செய்யப்பட்டோரின் விவரங்கள், போட்டி உள்ள மாவட்டங்கள் குறித்த தகவல்கள் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

மாவட்டச் செயலாளா் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. இந்த நிலையில், போட்டியின்றி தோ்வானோா் விவரங்கள், எங்கெல்லாம் போட்டி இருக்கிறது என்பன பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT