தமிழ்நாடு

நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறிய அமைச்சர்: காரணம் என்ன?

27th Sep 2022 01:22 PM

ADVERTISEMENT

உரிய ஏற்பாடுகள் சரியில்லை என்பதால் அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியேறினார்.

எழும்பூரில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பருவகால காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் நேரடியாக 1,000 மருத்துவர், செவிலியர் கலந்து கொள்வதாக கூறப்பட்ட நிலையில் 50 செவிலியர் மட்டுமே பங்கேற்றனர்.

இந்நிலையில், செவிலியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அதிகாரிகளிடம் கோபமாக பேசிவிட்டு அரங்கிலிருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் புறப்பட்டுச்சென்றார்.

இதையும் படிக்க: நிதி மோசடி வழக்கு: கொல்கத்தாவில் 3 இடங்களில் சிபிஐ சோதனை!

ADVERTISEMENT


மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  பாதியிலேயே வெளியேறியதால் அதிகாரிகளும், அரங்கிலிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT