தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம்

27th Sep 2022 05:50 PM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே 12 பேர் மீது குண்டர் சட்டத்தின் கிழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 4 பேர் மீது குண்டர் சட்டம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் பயின்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம், ஜூலை 17ஆம் தேதி கலவரமாக மாறியது. கலவரத்தில் பள்ளிக் கட்டடங்கள், காவல் துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் சிசிடிவி மற்றும் விடியோக்களின் அடிப்படையில் கைது செய்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT