தமிழ்நாடு

திருவாரூர், நன்னிலம் பள்ளிகளுக்கு விடுமுறை ரத்து

27th Sep 2022 10:12 AM

ADVERTISEMENT

கனமழை காரணமாக திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு  அறிவிக்கப்பட்ட  விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கனமழை தொடர்வதால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருவதால் அறிவிக்கப்பட்ட விடுமுறையைமாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ரத்து செய்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் வடுவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. 

ADVERTISEMENT

தொடர்ந்து பத்து நாள்களுக்கும் மேலாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாகக் கனமழை கொட்டித் தீர்க்கிறது. 

இதையும் படிக்க: ரூ. 8,000 - 12,000-ல் ஜியோ 5ஜி செல்போன்?

மன்னார்குடி, வடுவூர், எடமேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT