தமிழ்நாடு

புதுச்சேரியில் முழு அடைப்பு: 2 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு

27th Sep 2022 08:54 AM

ADVERTISEMENT

புதுச்சேரி: இந்து மக்களை அவமதித்து, விமர்சித்து பேசி வரும் திமுக எம்பி ஆ. ராசா உள்ளிட்டோரைக் கண்டித்து, புதுச்சேரியில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் அறிவித்தபடி முழு அடைப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 

புதுச்சேரியில் அண்ணா சாலை, நேரு வீதி, காமராஜர் வீதி, மறைமலை அடிகள் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடைகள் திறக்கப்படாமல் மூடி உள்ளன.

இதையும் படிக்க.. ராஜ ராஜ சோழன் யார் தெரியுமா? ஆவேசப் பேச்சால் அசர வைத்த விக்ரம்

புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழக அரசுப் பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. முழு அடைப்புப் போராட்டம் காரணமாக புதுச்சேரியில் பேருந்து நிலையம், முக்கிய சாலை சந்திப்புகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் இயங்கவில்லை. இந்த நிலையில் விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் காலையில் 7:00 மணிக்கு இயங்கிய இரண்டு தமிழக அரசு பேருந்துகளை வில்லியனூர் அருகே மர்ம நபர்கள் கல் வீசி தாக்கி கண்ணாடியை உடைத்துள்ளனர்.

புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக காலை நிலவரப்படி கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT