தமிழ்நாடு

மானாமதுரை பகுதி கிராமங்களுக்கு நகரப் பேருந்துகள் சேவை தொடக்கம் 

27th Sep 2022 01:37 PM

ADVERTISEMENT

மானாமதுரை:  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அரசு நகரப் பேருந்துகள் சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மானாமதுரைலிருந்து அருகேயுள்ள மேலநெட்டூர், திருப்பாச்சேத்தி, குவளைவேலி ஆகிய கிராமங்களுக்கு நகரப் பேருந்துகள் சேவையை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி கொடியசைத்து தொடக்கி வைத்தார். 

இதையும் படிக்க: நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறிய அமைச்சர்: காரணம் என்ன?

மானாமதுரை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இவ்விழாவில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவரும், திமுக மாவட்ட துணை செயலாளருமான சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா, அண்ணாதுரை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்துக் கழக அலுவலர்கள், திமுகவினர்  கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT