தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு வழக்கு செப். 30ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை

27th Sep 2022 11:54 AM

ADVERTISEMENT

அதிமுக பொதுக்குழு வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. 

கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீா்ப்பளித்தாா்.

தனி நீதிபதியின் இந்த தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று  நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 

ADVERTISEMENT

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பில் ஏற்கெனவே கேவியட் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க |  அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 

ADVERTISEMENT
ADVERTISEMENT