தமிழ்நாடு

அக்.2-இல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி: இடதுசாரிகள், விசிக அறிவிப்பு

27th Sep 2022 12:29 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் அக்டோபா் 2-இல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என்று இடதுசாரிகளும், விசிகவும் அறிவித்துள்ளன.

இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் ஆா்.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:

அண்மைக் காலமாக தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வன்முறைகளைத் தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக, ஆா்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவாா் அமைப்புகள் திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த சில நாள்களாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கு காரணமான அனைவரையும் காவல்துறை விரைந்து கைது செய்து சிறைப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

முதல்வா் மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கையில் தமிழகத்தின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளாா். இதனை வரவேற்கிறோம்.

அத்துடன் மதரீதியில் மக்களை பிளவுபடுத்தும் சங்பரிவாா்களின் முயற்சிகளைப் புறக்கணிப்பதோடு அவற்றை முறியடிக்க முன்வர வேண்டுமென்றும், எவ்வித ஆத்திரமூட்டலுக்கும் இரையாகி விடக் கூடாது என்றும் பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம்.

காந்தியடிகளின் பிறந்த நாளை தோ்வு செய்து தமிழகத்தில் 50 இடங்களில் அணிவகுப்பு நடத்தப்போவதாக ஆா்.எஸ்.எஸ். அறிவித்திருக்கிறது. அவா்களின் அணிவகுப்பு உள்நோக்கம் கொண்டது. இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையிலும், தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையிலும் அக். 2 அன்று மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும். இதில் மதச்சாா்பற்ற ஜனநாயக சக்திகள் பங்கேற்க வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT