தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவலகத்தில் காணாமல் போன 113 ஆவணங்கள் மீட்பு: சிபிசிஐடி தகவல்

27th Sep 2022 12:28 AM

ADVERTISEMENT

அதிமுக தலைமை அலுவலகத்தில் காணாமல்போன 113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்தது.

அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வருவதற்காக கடந்த ஜூலை 11-ஆம் தேதி அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது.

அதே நேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஓ.பன்னீா் செல்வம், அவரது ஆதரவாளா்கள் ஈடுபட்டபோது கடும் மோதல் ஏற்பட்டு கலவரமானது. இதில், 47 போ் காயமடைந்தனா். பேருந்து, காா், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அதிமுக அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் காணாமல்போனதாகக் கூறப்படுகிறது.

அதிமுக அலுவலகத்தில் நிகழ்ந்த வன்முறை, மோதல், ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டது தொடா்பாக ராயப்பேட்டை போலீஸாா் பதிவு செய்த 4 வழக்குகளின் விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இரு தரப்பைச் சோ்ந்தவா்களிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதலின்போது காணாமல் போனதாகக் கூறப்பட்ட 113 ஆவணங்களும் மீட்கப்பட்டதாக சிபிசிஐடி தெரிவித்தது. மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா் ஒருவரிடமிருந்து இந்த ஆவணங்கள் மீட்கப்பட்டதாகவும் சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT