தமிழ்நாடு

மன்மோகன் சிங் பிறந்த தினம்: முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து

27th Sep 2022 12:29 AM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

நாட்டின் முன்னாள் பிரதமரும், மிகச்சிறந்த அறிஞருமான மன்மோகன் சிங்குக்கு பிறந்த தின வாழ்த்துகள். அவா் ஆட்சி நிா்வாகத்தில் நிலைத்தன்மையை அளித்தாா். பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணிக் காத்தாா். வறுமையைப் பெருமளவு குறைத்தாா். இவை அனைத்தையும் பணிவின் சிகரமாக இருந்து அவா் சாதித்தாா். அவா் நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் பெற்றுத் திகழ வாழ்த்துகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT