தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்ட தீர்மானம்: விவசாயிகள் அதிர்ச்சி

DIN

தமிழகத்தின் 5 மாவட்டங்களின் குடிநீர் பாசன தேவையான முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட இடுக்கி மாவட்டத்தில் உள்ள  கிராம பஞ்சாயத்துத் தீர்மானம் நிறைவேற்றியது விவசாயிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ளது  வெள்ளியமட்டம் பஞ்சாயத்து, எலமதேசம், எலமதேசம் கிழக்கு, எலமதேசம் தோட்டம், பன்னி மட்டம், குருவகாயம், மெத்தோப்பு, பூமலை, கூவகண்டம், கோழிப்பண்ணை, கோலப்ரம், பூச்சபுரா, வெளிய மட்டம், கருக்காப்பள்ளி, வெட்டி மட்டம், நிஜலம்புரா உள்ளிட்ட 15 உட்கடை பகுதிகள் உள்ளது.

இதன் தலைவராக இந்து பிஜு (சுயேட்சை), என்ற பெண் உள்ளார். இங்கு உள்ள 15 வார்டுகளில்,  சுயேட்சைகள் - 8, சி.பி.எம்.கட்சி - 2, பாஜக - 1, காங்கிரஸ் (எம்) - 1 உறுப்பினர்கள் உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பஞ்சாயத்து கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணையைக் கட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர், இது தொடர்பாக கேரள முதல்வருக்கும் தீர்மானத்தை‌ அனுப்பி உள்ளனர்.

இதுபற்றி பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், 

முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளும் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது, முதலில் வெள்ளியமட்டம் பஞ்சாயத்து நிறைவேற்றி உள்ளது. 

முல்லைப் பெரியாறு அணை தண்ணீரைப் பயன்படுத்தும் தேனி, திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகள் புதிய அணை கட்டக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தமிழக அரசு மெத்தனப் போக்கு காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து புதிய அணை கட்ட தீர்மானம் நிறைவேற்றியிருப்பது 5 மாவட்ட விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT