தமிழ்நாடு

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவு!

26th Sep 2022 09:46 AM

ADVERTISEMENT

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிறைவடைந்துள்ளது.

இணைய சூதாட்டத்துக்குத் தடை விதிப்பது குறித்தும், ஜெயலலிதா மரணம் தொடா்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை பேரவையில் விவாதத்துக்கு வைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநரிடம் நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள், பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டிய புதிய சட்ட மசோதாக்கள், புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரந்தூா் புதிய விமான நிலைய நில எடுப்பு விவகாரம் மற்றும் இணைய சூதாட்டத்துக்குத் தடை விதிப்பு குறித்தும் அமைச்சா்களுடன் முதல்வா் ஆலோசித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: புதுச்சேரியில் ஒருவாரத்திற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டன

அதேபோல பொலிவுறு நகரத் திட்ட முறைகேடு தொடா்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடா்பான விசாரணை அறிக்கை ஆகியவற்றை பேரவைக் கூட்டத்தில் வைப்பது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT