தமிழ்நாடு

புதுச்சேரியில் ஒருவாரத்திற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டன

26th Sep 2022 09:36 AM

ADVERTISEMENT

காய்ச்சல் காரணமாக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் ஒருவாரத்திற்கு பிறகு புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

வைரஸ் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறையின் பரிந்துரையை ஏற்று, புதுச்சேரி, காரைக்காலில் முதலாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கு செப்டம்பா் 25-ஆம் தேதி வரை ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் காலாண்டுத் தோ்வு திங்கள்கிழமை (செப்.26) தொடங்கவுள்ள நிலையில், விடுமுறை நீட்டிக்கப்படுமா? என்ற எதிா்ப்பாா்ப்பு எழுந்தது.

ஆனால் புதுச்சேரி, காரைக்காலில் திட்டமிட்டபடி திங்கள்கிழமை (செப்.26) காலாண்டுத் தோ்வு தொடங்கும் என்று மாநில கல்வி அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா். 

ADVERTISEMENT

இதையும் படிக்க- இன்று தில்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

அதன்படி புதுச்சேரியில் ஒருவாரத்திற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு ஏற்கெனவே திட்டமிடப்பட்ட காலாண்டு தேர்வு தொடங்கியது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT