தமிழ்நாடு

பொள்ளாச்சி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: 3 பேர் கைது

26th Sep 2022 04:20 PM

ADVERTISEMENT


பொள்ளாச்சியில் இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 3 பேர் போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பாஜக, இந்து முன்னணி பிரமுகா்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. 

கடந்த 22 ஆம் தேதி இரவு பொள்ளாச்சியில் இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும் நடைபெற்றது. இதுதொடர்பாக தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. 

இதையடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சிசிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த பதிவுகளை ஆய்வு செய்தனர்.  

இதையும் படிக்க | ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! இனி ரயில்களில் இந்த வசதியும் உண்டு!!

இதனடிப்படையில், பொள்ளாச்சியில் ஐந்து சம்பவங்களில் ஈடுபட்ட பொள்ளாச்சி ஊத்துக்காடு சாலை பகுதியைச் சேர்ந்த முகமது ரஃபீக், செர்ரிஸ் காலனி பகுதியைச் சேர்ந்த மாலிக் என்கிற சாதிக் பாஷா, சூலேஷ்வரன் பட்டி மகாத்மா காந்தி வீதியைச் சேர்ந்த ரமீஸ் ராஜா ஆகிய மூன்று பேரையும் திங்கள்கிழமை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர் என்பதும், முகமதி ரபிக் அந்த அமைப்பின் பொள்ளாச்சி நகர தலைவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

மேலும், அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT