தமிழ்நாடு

தஞ்சையில் கனமழை: மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் மக்கள் அவதி

DIN

தஞ்சையில் நேற்று இரவு பெய்த கனமழையால், மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று இரவு  தஞ்சாவூரில் 12 சென்டி மீட்டரும், வல்லத்தில் 17 சென்டி மீட்டரும், பூதலூரில் 16 சென்டி மீட்டரும், கல்லணையில் 15 சென்டி மீட்டரும், நெய்வாசல் தென்பாதியில் 11 சென்டி மீட்டரும், கும்பகோணத்தில் 1.2 சென்டி மீட்டரும், கீழணை பகுதியில் 1.8 சென்டி மீட்டரும், பட்டுக்கோட்டையில் 8.8 சென்டி மீட்டரும், மதுக்கூரில் 3.6 சென்டிமீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளது. 

மாவட்டத்திலுள்ள பெய்த 21 இடங்களில் மொத்தமாக 105.9 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. இந்த கன மழை காரணமாக தஞ்சாவூர் காயிதேமில்லத் நகர், வல்லம் பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் புகுந்தது. 

முழுங்கால் அளவு தண்ணீர் நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக இரண்டு வீடுகளின் பக்கவாட்டு இடிந்து விழுந்துள்ளது. மேலும் 50-மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இந்த கனமழையால் 10 கோழிகள், 2 முயல்கள் உயிரிழந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT