தமிழ்நாடு

இன்று தில்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

26th Sep 2022 09:23 AM

ADVERTISEMENT

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை தில்லி செல்கிறார். 

தமிழகத்தில் கோவை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாள்களாக பாஜக பிரமுகா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு மற்றும் டீசல் பாக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 

இதையும் படிக்க- ஹிமாசலில் சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் பலி

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை தில்லி செல்கிறார். தில்லி செல்லும் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். 

ADVERTISEMENT

இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்து அமித்ஷாவிடம் ஆளுநர் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் ஆளுநரின் தில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT