தமிழ்நாடு

புதுவையில் மேலும் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல்: பாதிப்பு 21 ஆக உயர்வு!

26th Sep 2022 11:30 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி மேலும் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. திங்கள்கிழமை மேலும் 354 சிறார்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் தற்போது பன்றிக் காய்ச்சல் தோற்றம் பரவி வருகிறது. தினசரி பன்றிக் காய்ச்சலைக் கண்டறியச் சோதனை செய்யப்படுகிறது. இதன்படி திங்கள்கிழமை கடுமையாக காய்ச்சல் பாதித்த 82 பேரிடம் சோதனை செய்ததில் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வரை 15 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு குழந்தை உட்பட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT

ஏற்கனவே 15 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT