தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 538 பேருக்கு கரோனா

25th Sep 2022 07:51 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று மேலும் 538 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 538 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க- அமித்ஷாவின் இந்தி வெறி பேச்சைக் கண்டித்து அக்.6-ல் ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

இதில் அதிகபட்சமாக சென்னையில் 110 போ், செங்கல்பட்டில் 51 போ், கோவையில் 35 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் மொத்த பாதிப்பு 35,80,439-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

கரோனாவால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 38,046ஆக உள்ளது. 

இன்று ஒரு நாளில் மட்டும் 492 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,36,998-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,395 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT