தமிழ்நாடு

நீடாமங்கலத்தில் பனைத்திருவிழா - 2022

DIN



நீடாமங்கலத்தில் பனைத்திருவிழா 2022 நடைபெற்றது. கிரின்நீடா திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கே.ஜானகிராமன் தலைமை வகித்தார். பனைத் திருவிழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.நாராயணன் பேசுகையில் - திருவள்ளுவர் பனை ஓலையில்தான் குறளை எழுதினார். பனை ஓலையில் தான் அந்த காலத்தில் ஜாதகங்கள் எழுதினார்கள்.

மன்னர்கள்  தூது அனுப்ப பனை ஓலையில்தான் எழுதி அனுப்பினார்கள். படிப்பிற்கும் பனை ஓலைதான் பயன்படுத்தப்பட்டது. வீடுகட்டுவதற்கும் பனை ஓலைதான் பயன்படுத்தப்படுகிறது. பனைமரம் ஏறுபவர்கள் பனைத் தொழிலாளி என அழைப்பார்கள். நாள் ஒன்றிற்கு பனை மரம் ஏறுபவர்கள் ஆயிரத்து 500 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் பசுமையாக இருக்க வேண்டும் என்பதே தமிழக முதல்வர் விருப்பம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பட்டுப்போன பனைமரங்களை வெட்டலாம். பருவமுள்ள பனை மரங்களை வெட்டக்கூடாது. பனை மரத்தொழிலாளர்கள் அனைவரும் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர வேண்டும். வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கயை அதிகிரிக்க நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளது என்றார்.

விழாவில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரிய செயலாளர் ஏ.திவ்யநாதன், தஞ்சாவூர் வேளாண் செயற்பாட்டாளர் வக்கீல் ஜெ.ஜீவக்குமார், நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், வேலுடையார் கல்வி நிறுவனங்கள் தலைவர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினர். கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

முன்னதாக சென்னை லயன்ஸ்சங்க தலைவர் என்.ராமகிருஷ்ணன் கொடியேற்றினார். பனை உணவு போட்டியை எக்ஸ்னோரா தலைவர் எஸ்.செந்தூர்பாரி துவக்கி வைத்தார். கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு வரவேற்றார். நிறைவில் பசுமை எட்வின் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

எந்த தேசத்து அழகியோ..!

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

SCROLL FOR NEXT