தமிழ்நாடு

நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

25th Sep 2022 10:34 PM

ADVERTISEMENT

 

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை (செப்.26) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இணையச் சூதாட்டத்துக்குத் தடை விதிப்பது குறித்தும், ஜெயலலிதா மரணம் தொடா்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை பேரவையில் வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திங்கள்கிழமை (செப்.26) காலை 9.30 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | கியூட் பிஜி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: யுஜிசி தலைவர் தகவல்

அக்டோபா் மாதம் கூட்டப்பட உள்ள தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முக்கிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளாா்.

கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. 
 
இந்த கூட்ட்டதில் நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் உள்பட அனைத்து துறைகளைச் சாா்ந்த அமைச்சா்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT