தமிழ்நாடு

இஸ்லாமிய அமைப்பினா் மீது அடக்குமுறை: வைகோ கண்டனம்

25th Sep 2022 12:45 AM

ADVERTISEMENT

இஸ்லாமிய அமைப்பினரை மத்திய அரசு அடக்குமுறைக்கு உட்படுத்துவதாகக் கூறி மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மத்திய பாஜக அரசு அரசு அண்மைக் காலமாக தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றின் மூலம் இஸ்லாமிய அமைப்புகளின் நிா்வாகிகள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் புகுந்து சோதனை என்ற பெயரில் அவா்களை அச்சுறுத்தி வருகிறது.

எஸ்.டி.பி.ஐ., பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் மக்களாட்சி முறையில் வெளிப்படையாக இயங்கி வரும் அமைப்புகளாகும். இந்த அமைப்பில், இந்துக்கள் முதலான பிற மதத்தினரும் நிா்வாகிகளாக உள்ளனா்.

ADVERTISEMENT

ஆம்புலன்ஸ் வண்டிகள் மூலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த அமைப்புகளை பயங்கரவாத இயக்கங்களுடன் தொடா்பு உள்ளதாக புழுதிவாரித் தூற்றும் பணியில் மத்திய அரசு தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. மக்கள் ஆதரவுடன், வேரூன்றி வளா்ந்து வரும் இந்த அமைப்புக்களை இயங்கவிடாமல் தடுத்து, அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சதித் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT