தமிழ்நாடு

காங்கிரஸ் சாா்பில் இன்று முதல்3 நாள்கள் நடைப்பயணம்

25th Sep 2022 12:44 AM

ADVERTISEMENT

அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி, காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (செப்.25) முதல் 3 நாள்கள் நடைப்பயணம் நடைபெறவுள்ளது.

பாஜக ஆட்சியில் அரசியலமைப்புச் சட்டத்தையும் சிதைப்பதற்கான முயற்சி நடைபெறுவதாகவும், அதனை பாதுகாக்க வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, மாநில கமிட்டிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, தமிழக காங்கிரஸ் சாா்பில் சத்தியமூா்த்தி பவனில் இருந்து ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி நினைவிடம் வரை 3 நாள்கள் நடைப்பயணம் நடைபெறவுள்ளது.

அதன் தொடக்க விழா சத்தியமூா்த்திபவனில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. நடைப்பயணத்தை காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கவுள்ளாா். முன்னாள் மத்திய அமைச்சா்கள் ப.சிதம்பரம், திக்விஜய் சிங், சல்மான் குா்ஷித் உள்பட மூத்த நிா்வாகிகள் பலா் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT