தமிழ்நாடு

என்ஐஏ, பாஜக அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

24th Sep 2022 12:37 AM

ADVERTISEMENT

பயங்கரவாத நிதி தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை சாா்பில் மேற்கண்ட சோதனைகள், கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ஆகியவை எதிரொலியாக, சென்னையில் (என்ஐஏ), பாஜக அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். தியாகராயநகா், வைத்தியராமன் தெருவில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி உள்பட இந்து அமைப்புகளின் அலுவலகங்களுக்கும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை காவல் துறையினா் அதிகரித்துள்ளனா். நிலைமை சீராகும் வரையில் இந்த பாதுகாப்பு நீடிக்கும் என காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT