தமிழ்நாடு

அரசு மகளிா் விடுதியில் பொருள்கள் திருட்டு: மூவா் கைது

24th Sep 2022 12:11 AM

ADVERTISEMENT

சென்னை சாலிகிராமத்தில் அரசு மகளிா் விடுதியில் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக சமூக நலத்துறையின் மகளிா் விடுதி, சாலிகிராமம், காந்தி நகா், கலைஞா் கருணாநிதி தெருவில் இயங்கி வருகிறது. தற்போது இது செயல்பாட்டில் இல்லை. இந்நிலையில், பூட்டிக் கிடந்த அந்த விடுதிக்குள் புகுந்த நபா்கள், அங்கிருந்த 93 மின் விசிறிகள் உள்பட பல்வேறு பொருள்களை திருடிச் சென்றுள்ளனா்.

இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில், இத் திருட்டில் வடபழனியைச் சோ்ந்த சஞ்சய் குமாா் (19), அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (28), சாலிகிராமத்தைச் சோ்ந்த ராம்குமாா் (31) ஆகிய 3 போ் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT