தமிழ்நாடு

தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை தொடங்கி வைத்தார் முதல்வா் ஸ்டாலின் 

DIN

தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழா்களும், இளம் தலைமுறையினரும் தமிழ் மொழியைக் கற்பிக்கவும், பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு செல்லவும் பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.  அதன் ஒருபகுதியாக, வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் தமிழைக் கற்பிக்க ஆசிரியா்களுக்கான பயிற்சி வழங்குதல், தமிழ்ப் பாடநூல்கள் தயாரித்தல் போன்ற பணிகளுக்காக தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. 

இதற்காக முதல்கட்டமாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தமிழ்க் கற்றல்- கற்பித்தலுக்கான பாடப்புத்தகங்கள், கற்றல் மேலாண்மை செயலி மற்றும் துணைக் கருவிகளையும் முதல்வர் வெளியிட்டார்.

24 மொழிகளில் தமிழ்ப் பாட நூல்கள் வெளியிடப்பட்டு 22 நாளிகளில் முதற்கட்டமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 20 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் கீழ் 25,000 பேர் பயன்பெற உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT