தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றும் கரோனாவுக்கு 2 பேர் பலி

24th Sep 2022 08:41 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று மேலும் 2 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 533 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 116 போ், செங்கல்பட்டில் 53 போ், கோவையில் 32 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 

இதனால் மொத்த பாதிப்பு 35,79,901-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் இன்று 2 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 38,046ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 479 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க- தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா: நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,36,506-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,349 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT