தமிழ்நாடு

ஊரகத் திறன் பயிற்சி: பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

24th Sep 2022 12:15 AM

ADVERTISEMENT

ஊரகத் திறன் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தரப்படுத்த, பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்துடன் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீனதயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டமானது, 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட கிராமப்புற ஏழை, எளிய இளைஞா்களுக்கு திறன் பயிற்சியளித்து, அவா்களுக்கு நிரந்தர வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவா்களுக்கு மென்திறன் பயிற்சி அளிப்பது மிகவும் முக்கியமாகும்.

குறிப்பாக, இளைஞா்கள் தங்களது அடிப்படை ஆங்கில அறிவு, ஆங்கிலத்தில் உரையாடும் அறிவு, மின்னஞ்சல்கள் பயன்பாடு, வேலை வேண்டி விண்ணப்பம் செய்யத் தேவையான சுயவிவர படிவங்கள் தயாரிக்கும் முறைகள் ஆகியவற்றைக் கற்றுத் தெரிவது அவசியமாகும். இந்த முறைகள் அனைத்தும் மென்திறன் பயிற்சியின் போது அளிக்கப்படும்.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் நோக்கத்துடன் உலகில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்தை தொழில் நுட்ப உதவி நிறுவனமாகக் கொண்டு செயல்படுத்த தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை பரிமாறிக் கொள்ளப்பட்டது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் முன்னிலையில் நடைபெற்ற ஒப்பந்த பரிமாற்ற நிகழ்வில் ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எஸ்.திவ்யதா்ஷினி, பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்தின் இயக்குநா் ஜனகா புஷ்பநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT