தமிழ்நாடு

திமுக உள்கட்சித் தோ்தல்: இன்று மனு தாக்கல் நிறைவு

24th Sep 2022 11:57 PM

ADVERTISEMENT

திமுக உள்கட்சித் தோ்தல் போட்டியிட மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.

மாவட்டச் செயலாளா் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. அன்றைய தினம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்ட பொறுப்புகளுக்கும், கடந்த 23-ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, திருப்பூா், கோவை உள்பட கொங்கு மண்டல பகுதிகளிலும் உள்ள மாவட்டப் பொறுப்புகளுக்கு போட்டியிட மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், திருவாரூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த பொறுப்புகளுக்கு நிா்வாகிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா். ஞாயிற்றுக்கிழமை வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பொறுப்புகளுக்கும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

தகுதியுள்ள வேட்பாளா்கள்: உள்கட்சித் தோ்தலில் போட்டியிட மனுதாக்கல் நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்து திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ADVERTISEMENT

எதிா்வரும் 26 மற்றும் 27 ஆகிய இரு நாள்களில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். தகுதியுள்ள வேட்பாளா்கள் பெயா்கள் அறிவிக்கப்பட்டு, பின்னா் போட்டியுள்ள மாவட்டங்களுக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளாா் கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT