தமிழ்நாடு

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி தர உத்தரவு

24th Sep 2022 04:53 PM

ADVERTISEMENT

அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வரும் நவம்பவர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிதி நெருக்கடியால் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிக்க- கடந்த ஜூலையில் மோடியைக் கொல்லத் திட்டமிடப்பட்டதா? என்ஐஏ திடுக்‍கிடும் தகவல்

ஆனால், நிதி நெருக்கடியை காரணமாகக் கூறும் அரசு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது எப்படி? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ADVERTISEMENT

இதையடுத்து அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வரும் நவம்பவர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க தமிழக அரசு, போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி அறக்கட்டளைக்கு உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம் அகவிலைப்படி வழங்கியது குறித்து நவம்பவர் 25ல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT