தமிழ்நாடு

அண்ணா பிறந்தநாள்: திருச்சி சிறைகளில் இருந்து 14 கைதிகள் விடுதலை

DIN

திருச்சி: அண்ணா பிறந்தநாளையொட்டி திருச்சி சிறைகளில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை ஆண்டுதோறும் செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக அரசு கொண்டாடி வருகிறது.

இதனையொட்டி சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று நன்னடத்தையோடு இருக்கும் கைதிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பொது மன்னிப்பு மூலம் விடுதலை செய்யப்படும் நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நிகழாண்டு அண்ணா பிறந்தநாளையொட்டி  இன்று திருச்சி சிறைகளிலிருந்து மொத்தம் 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை ஆண் கைதிகள் ராஜா, சுந்தர்ராஜன், சாமிநாதன், ராமதாஸ், சின்னத்தம்பி, நாகேந்திரன், ரமேஷ், நாகராஜ், சுதாகர், ரஞ்சித்குமார், பச்சையப்பன், சாமிதுரை ஆகிய 12 பேரும் திருச்சி மகளிர் சிறையில் இருந்து 2 பேரும் என 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல புதுக்கோட்டை கிளைச் சிறையில் இருந்து 4 பேர் சேர்த்து திருச்சி மண்டலத்தில் மொத்தம் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக சிறைக் கைதிகள் யாரும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்படாத நிலையில் இந்தாண்டு திருச்சி மண்டலத்தில் மொத்தம் 18 பேர் விடுதலை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

SCROLL FOR NEXT