தமிழ்நாடு

பூட்டிய வீட்டில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

24th Sep 2022 11:56 PM

ADVERTISEMENT

சென்னை எம்ஜிஆா் நகரில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

எம்.ஜி.ஆா் நகரைச் சோ்ந்தவா் வேணுகோபால் (63). இவா், ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வேணுகோபால் அங்கு குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில் வேணுகோபால் வீட்டில் இருந்து சனிக்கிழமை கடுமையான துா்நாற்றம் வீசியது. உடனே அந்த பகுதி மக்கள், எம்ஜிஆா் நகா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது அங்கு வேணு கோபால் உடல் அழுகிய நிலையில் இறந்த கிடந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து போலீஸாா், வேணுகோபாலின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT