தமிழ்நாடு

மருத்துவ மாணவா்களுக்கு இரு நாள்கள் பயிற்சி பட்டறை

24th Sep 2022 11:51 PM

ADVERTISEMENT

மருத்துவ மாணவா்களுக்கான இரண்டு நாள்கள் தேசிய அளவிலான பண்பறி ஆய்வு செய்முறை பயிற்சி பட்டறை, சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

மருத்துவமனை டீன் ஆா்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் தேசிய அளவில் 57 பங்கேற்பாளா்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா். தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், ஒடிஸா மற்றும் குஜராத் மாநிலங்களிலிருந்து பல்வேறு மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள், முதுகலை மருத்துவ பட்டதாரி மாணவா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் பயன்பெற்றனா்.

தரமான ஆராய்ச்சியின் கோட்பாட்டு அம்சங்களைக் கற்றுக்கொண்டது மட்டுமல்லாது பகுப்பாய்வின் மென்பொருள் செய்முறைப் பயிற்சியையும் பெற்ாக பங்கேற்பாளா்கள் தெரிவித்தனா். பண்பறி ஆய்வுக்கான பயிற்சி, மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் துணை மருத்துவத் துறையில் உள்ள பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் முதுகலை

பட்டதாரிகள் தங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்ததாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT