தமிழ்நாடு

கவிஞர்களில் சிங்கம்

DIN

வைணவத்தின் சிறப்பான  ஸ்ரீ வேதாந்த தேசிகன்  கி.பி. 1268}ஆம் ஆண்டு, விபவ வருடம், புரட்டாசி மாதம், சிரவணம் நட்சத்திர புதன்கிழமை அனந்தசூரி - தோதார்ம்மைக்கு காஞ்சிபுரம் தூப்புலில்  திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக  விளக்கொளிப் பெருமாள் கோயில்  அருகில் அவதரித்தார். 

"சுவாமி தேசிகன்',  "தூப்புல் நிகமாந்த தேசிகன்',  "தூப்புல் பிள்ளை', "உபயவேதாந்தாசாரியர்',  "சர்வத் தந்திர சுதந்திரர்',  "வேதாந்த தேசிகன்' எனவும்  பட்டப் பெயர் பெற்றவரின் இயற்பெயர் வேங்கடநாதன் .  

வாழ்க்கை:  ஏழாம் வயதில்  கிடாம்பி அப்புள்ளாரால் உபநயனம் செய்து, வடமறை வேதங்களும், தென்மறை திவ்யபிரபந்தமும், புராணங்களும், சாத்திரமும்  பயின்றார். 21-ஆவது வயதில் திருமங்கையை மணம் புரிந்தார்.  27}ஆம் வயதில்  வைணவ குரு என்ற  நிலையை அடைந்தார்.  கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி கடலூர்} திருவஹீந்தரபுரம் சென்று ஒüஷதகிரியில் தவம் செய்து ஹயக்ரீவரின் அனுக்ரகம் பெற்றார். அப்புள்ளார் கனவில் உடையவர் தோன்றி  தாம் ஆராதனை செய்து வந்த ஹயக்ரீவர் விக்கிரகத்தை இவரிடம் கொடுத்து ஆராதிக்கச் சொன்னார். அயோத்தியா, பிருந்தாவனம், பத்ரிநாத், திருப்பதி, மேல்கோட்டை, சத்யகளம், காஞ்சிபுரம், திருவரங்கம் உள்ளிட்ட எண்ணற்ற தலங்களுக்கு சென்று  தங்கி ஜெகத்குரு இராமானுசரின் தத்துவங்களை நிறுவினார் அரங்கனும் தாயாரும் தந்தது:  

திருவரங்கத்தில்  அத்யயனஷ உற்சவத்துக்கு முன்பு சிலர் தங்களிடம் வைணவர்கள்  வாதிட்டு வென்றால் மட்டும் அத்யயன உத்ஸவம் நடத்தலாமென முரண்டு செய்தனர். வைணவர்கள்  தேசிகரை திருவரங்கம் அழைக்க அரங்கன் அருளால் வணங்கி வாதத்தை 7 நாள்கள் தொடர்ந்து 8}ஆம் நாள் வென்றார், அந்த விவாதங்கள் சததூஷனி என்ற பெயரால் தினமும் வீரவல்லி பெருமாளையனால் தொகுக்கப்பட்டது. அதுமுதல் பெருமாள் உத்தரவுப்படி விஷிஷ்டாத்வைத அடிப்படையான  கிரந்த சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். அறிதுயில் கொள்ளும் அரங்கனும் அருள் வழங்கும்  அரங்கநாயகியும் ஸ்ரீ பாஷ்ய விரிவைக் கேட்டு  வந்தனர். இறுதியில் அரங்கன்  தேசிகரை "வேதாந்தாச்சாரியார்' என்று பட்டம் தந்தார், ஸ்ரீரங்க நாச்சியார் "சர்வ தந்திர ஸ்வதந்திரர்' என்ற விருதையும் அளித்தார்.

தேசிகப்பிரபந்தம்:  திருவரங்கன்  திருவடி உயர்வைக் குறித்து ஆயிரம் பாடல்கள் கொண்ட "பாதுகாசகஸ்ரம்' என்ற நூல், ராமன் மீது "ரகுவீரகத்யம்',, திருக்கோவலூர் ஆயனார் மீது "தேகளீசதுதி', தன்னை நாயகியாகவும் பெருமாளை நாயகனாகவும் பாவித்து எழுதிய "அம்சம் விடுதூது' , அடைக்கலப்பத்து, மும்மணிக்கோவை, நவமணிமாலை, அதிகாரசங்கிரகம், எவற்றையுண்ண வேண்டுமென  "ஆகாரநியமம்', போன்ற தமிழ் நூல்களும், வடமொழியில் ஆண்டாளைப் போற்றும்  கோதாஸ்துதி, யதிராஜ சப்ததி, வைராக்ய பஞ்சகம்,  எந்த அச்சமும் வந்து தீண்டாமல் இருக்க அபீதிஸ்தவம், பூதேவியைப் போற்றும் பூஸ்துதி, போன்ற சுமார் நூற்றிருப்பத்து நான்கு (124) நூல்களை தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் இயற்றியுள்ளார். இவை தேசிகப் பிரபந்தங்களென  தொகுக்கப்பட்டு   தினமும்  ஓதப்பட்டு வருகிறது .

உபயவேதாந்தர்: வடமொழி உயர்வு இருந்த காலத்தில்  தமிழ்மொழி தெய்வத்தன்மை உடையது என்று உடையவரைப் பின்பற்றி முதன்முதலில் நிறுவியவர் இவர். "உபய வேதாந்தம்' எனும்  கொள்கையை உருவாக்கி கோயில்களில் வடமொழியோடு ஆழ்வார்களின் திருமொழியும் இடம்பெறு
மாறு செய்தவரும் இவரே. 

திருவுரு: வடகலை வைணவத்தைப் பின்பற்றும் கோயில்களில் இவருக்கென தனி சந்நிதியோடு  வழிபாடும்  நடத்தப்படுகிறது. இவரது மூலத்திருவுருவும் உற்சவத்திருவுருவும் பெரும்பாலான இடங்களில் மாறுபடுவதில்லை. அமர்ந்த கோலத்தில் ஞானமுத்திரையும் மற்றொரு கரத்தில் கோசம் எனும் ஓலைச்சுவடி கொண்டவராக இருப்பார். தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கையில் இருக்கும் ஓலையில் 15-ஆம் நூற்றாண்டு கிரந்த எழுத்தில் பிரும்ம சூத்திரத்தின் முதல் சூத்திரம் எழுதப்பட்டுள்ளது. ஹயக்ரீவ உபாசகரான இவரை வணங்குவதால் மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறப்பர். தேசிகர்  தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கத்தில் வாழ்ந்த போது  102 -ஆம்  வயதில்1369}ஆம் ஆண்டு, சீடர்கள் சூழ்ந்திருக்க திருநாடு அலங்கரித்தார்.

அவரது அவதாரத்தலமான தூப்புலில் ஒவ்வோராண்டும் அவதார மஹோத்ஸவம் 10 தினங்கள் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு செப்.  26}இல் தொடங்கி,  அக். 5}இல் நிறைவு பெறுகிறது. அக். 2} திருத்தேர்.

விவரங்களுக்கு :}8925406099,  9994293004.

- ஆர்.அனுராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT