தமிழ்நாடு

சேவூரில் பனியன் வேஸ்ட் குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

DIN

அவிநாசி: சேவூரில் பனியன் வேஸ்ட் குடோனில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் இருந்து நாசமானது.

சேவூர் புளியம்பட்டி சாலையில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான பனியன் வேஸ்ட் குடோன் உள்ளது. இங்கு வியாழக்கிழமை நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேவூர் போலீசார், அவிநாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ அதிக வேகத்துடன் பரவியது. 

இதையடுத்து மேலும், ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடியும், உள்ளிருந்த இயந்திரங்கள், பனியன் வேஸ்ட் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. 

இது குறித்து சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்சம்பவம் சேவூரில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT