தமிழ்நாடு

பிணையில்லா கடன் திட்ட வட்டி விகிதத்தை 9% குறைக்க வேண்டும்: தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்

22nd Sep 2022 10:44 AM

ADVERTISEMENT

 

ஈரோடு: பிணையில்லா கடன் திட்ட வட்டி விகிதத்தை 9 சதவீதமாக குறைத்து வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 2 ஆவது செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

நசியனூர் சாலையில் உள்ள சங்கத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் ரவிச் சந்திரன், பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் கே.கே.பாலுசாமி பங்கேற்றுப் பேசினார்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் நடராஜ முதலியார் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து, கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்கள், சிவ நேசன், ஜெகதீசன், தேவராஜா, முன்னாள் செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கெளரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, அரசின் பிணையில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி சில்லறை மற்றும் மொத்த வணிகர்களுக்கும் கடன் வழங்க வேண்டும்.

இதையும் படிக்க | 2026க்குள் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்: ஆய்வில் தகவல்

தற்போது பிணையில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ள 12 சதவீத வட்டியை 9 சதவீதமாக குறைத்து வழங்க ஆவண செய்ய வேண்டும்.

தற்போது, ஜிஎஸ்டி செலுத்தும்போது சலானில் மதிப்பீட்டாளர்கள் கட்டாயம் கையொப்பமிட வேண்டும் என வங்கிகள் கூறுகின்றன. இந்த நடைமுறை தொழில் வணிகர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே, முகவர்கள் கையொப்பமிட்டாலே வங்கிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இணைச் செயலாளர் பழனிசாமி நன்றி கூறினார்.

இதில், கூட்டமைப்பின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT