தமிழ்நாடு

சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்பு

22nd Sep 2022 01:50 PM

ADVERTISEMENT

 

சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா வியாழக்கிழமை (செப்.22) பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த வந்த முனீஸ்வா் நாத் பண்டாரி திங்கள்கிழமையுடன்(செப்.12) ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எம்.துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி செவ்வாய்க்கிழமை(செப்.12) பொறுப்பேற்றுக் கொண்டாா். செப்டம்பா் 21-ஆம் தேதியுடன் நீதிபதி எம்.துரைசாமி ஓய்வுபெற்றார். 

ADVERTISEMENT

 

இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி, சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா வியாழக்கிழமை (செப்.22) பொறுப்பேற்றுக் கொண்டாா். இவர் அடுத்த ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி பணி ஓய்வு பெற்றதை அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் 21 நீதிபதிகளின் பணியிடம் காலியாக உள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT